வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:23 IST)

ஒரு வார இடைவெளியில் விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடிப்பில் இப்போது ஏகப்பட்ட படங்கள் ரிலிஸுக்கு தயாராக உள்ளன.

விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்கள் அடுத்த மாதம் 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வெளியாக உள்ளன. இதில் லாபம் படம் மட்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. துக்ளக் தர்பார் மற்றும் கடைசி விவசாயி முறையே செப்டம்பர் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் மற்றும் சோனி லைவ் ஆகிய தளங்களில் வெளியாகின்றன.

அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.