திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (10:07 IST)

கின்னஸில் நரேந்திர மோடி மைதானம்… ஐபிஎல் இறுதிப் போட்டி படைத்த சாதனை

கடந்த மே மாதம் 29 ஆம் தேதி குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோத, குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இந்த போட்டியை மைதானத்தில் 1, 01, 566 பேர் பார்த்தனர். இதுவே ஒரு டி 20 போட்டியை அதிக ரசிகர்கள் கண்டுகளித்த நிகழ்வாக அமைந்தது. இதையடுத்து இந்த போட்டி மற்றும் மைதானம் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது சம்மந்தமான சான்றிதழை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கின்னஸ் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.