திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (08:04 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வருகிறது என்பதும் இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 18 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் இருப்பது பொதுமக்களுக்கு நிம்மதி அளித்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் விற்பனையாகி வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு இதே நிலையில்தான் விற்பனையாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.