புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:03 IST)

சென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

சென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்?
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை உள்பட அனைத்து மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெறும் என்பதும் அதில் சென்னை மேயர் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவரது மகன் முக ஸ்டாலின் சென்னை மேயர் ஆனார் என்பதும் அப்போது அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பது தெரிந்ததே
 
அதேபோல் தான் முதல்வராக இருக்கும் போதே அரசியலில் பக்குவப்பட உதயநிதி ஸ்டாலினை மேயராக்கி பார்க்க வேண்டும் என்பதே என் முதலமைச்சர் முக ஸ்டாலின் எண்ணமாக உள்ளதாக கூறப்படுகிறது
 
எனவே வரும் மேயர் தேர்தலில் சென்னை மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.