செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:44 IST)

தோனி சரியாக 7.29 மணிக்கு ஓய்வு பெற்றது ஏன் – இதுதான் காரணமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு முடிவு பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

அதில் ‘இன்று மாலை 7.29 முதல் நான் ஓய்வு பெற்றதாக நீங்கள் கருதலாம்’ எனத் தெரிவித்திருந்தார். அவரின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இப்ப்போது ஏன் சரியாக 7.29 க்கு அவர் ஓய்வு முடிவை அறிவித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கையில் ‘உலகின் தென் பகுதியில் உள்ள நாடுகள் பலவற்றில் அன்று அந்த நேரத்தில் தான் சூரியன் மறைவதாகவும் அதை குறிப்பிட்டே தனது ஓய்வு முடிவை அப்போது அறிவித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.