சென்னை வந்த தோனி அண்ட் கோ: பயிற்சிக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:48 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில வீரர்கள் சென்னை வந்துள்ள நிலையில் பயிற்சிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி விளையாடுவது உறுதியாக தெரியாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஐபிஎல் தொடர். செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடக்க இருக்கும் தொடரை மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். 
 
இந்நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னை அணி வீரர்கள் அமீரகம் செல்ல இருக்கின்றன. இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னைக்கு வந்து 5 நாட்களுக்கு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். எனவே நேற்று கொரோனா சோதனை செய்துக்கொண்ட பின் சென்னை புறப்பட்ட தோனி இன்று சென்னை வந்தடைந்தார். 
 
சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா, தீபக் சாஹல், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோரும் சென்னை வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு இங்கு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை, 
 
1. பயிற்சி நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் சென்னை அணி வீரர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.
2. சேப்பாக்க மைதானத்தை நிவகிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். 
3. வீரர்கள் ஹோட்டல்கள் தனியாக தங்க வைக்கப்படுவார்கள்.
4. வீரர்களை குடும்பத்தினரோ, வெளிநபர்களோ சந்திக்க அனுமதி வழங்கப்படாது. 


இதில் மேலும் படிக்கவும் :