திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 15 ஆகஸ்ட் 2020 (21:35 IST)

தல தோனியின் சாதனை மகத்தானது – சச்சின் புகழாரம்

இந்த சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியத தினம். ஏனெனில் இன்று தோனி ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். இந்த சோகம் ஆறுவதற்குள் இந்திய கிர்க்கெட் அணியின் மற்றோரு வீரரும் சின்னத் தலை என்று அழைப்படுபவருமான சுரேஷ் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் கடைசி ஐபிஎல் போட்டிகள் இதுவாகத்தான் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் சாதனை மகத்தானது என சச்சின் டெண்டுல்கல் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்திய கிரிக்கெட்டுக்கா உங்களது பங்கு மகத்தானது. நாம் இருவரும் இணைந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றது என்றைக்கும் என் வாழ்வில் மறக்க முடியாது. உங்களது இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்கும் என வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.