’’எனது ஆல்டைம் ஃபேவரெட் கிரிக்கெட்டர் , ஐகானிக் தல தோனி’’ – நடிகர் விஷால் டுவீட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் தோனி எனது ஆல்டைம் ஃபேபரை கிரிக்கெட்டர் என பதிவிட்டுள்ளார்.
இந்த சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியத தினம். ஏனெனில் இன்று தோனி ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு தோனியைப் பாராட்டி வருகின்றனர். வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த கிரிக்கெட் உலகம் மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த உலகமே தோனியை மிஸ் செய்யும் எனப் பதிவிட்டுள்ளார்.