டி -20 உலகக் கோப்பை : ஆஸ்திரேலியா அணி ’அதிரடி’ பேட்டிங்... இந்தியாவுக்கு 184 ரன்கள் இலக்கு !

women world cup
sinoj kiyan| Last Updated: ஞாயிறு, 8 மார்ச் 2020 (14:13 IST)
டி -20 இறுதிப் போட்டி : ஆஸ்திரேலியா அணி ’அசுர’ பேட்டிங்... இந்தியாவுக்கு 185 ரன்கள் இலக்கு !
மகளிர் உலகக் கோப்பை டி- 20 இறுதிப்போட்டி இன்று
மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில், 10 நாடுகள் பங்கேற்றன. இந்தியா
சிறப்பாக செயல்பட்டதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முந்தினம் மோத வேண்டிய முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. லீக் சுற்றி முதலிடம் பிடித்த இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு ஆட்டதில் ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரியா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்நிலையில் டி -20 இறுதிப்போட்டி,இன்று மெல்போர்னில் நாளை நடந்துவருகிது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். கேப்டன் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியினர் தற்போது பந்துவீசி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய மகளிர் அணியில், தொடக்க வீராங்கனை பெத் மூனே தனது 9 வது சர்வதேச அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, அதிரடியாக விளையாடி வந்த ஆஸ்திரேலியா வீராங்கனை அலிசா ஹேலி 75 ரன்களுக்கு அவுட் ஆனார். 12 ஒவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து ஆடியது.

பின்னர், 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது.
இந்திய அணிக்கு 184 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.


ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத்மூனி 78 ரன்களும், ஹூலி 75 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2, பூனம் ராதா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.இதில் மேலும் படிக்கவும் :