ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (16:02 IST)

’ஹார்லிக்ஸ் டப்பா’ கலரில் புதிய சீருடை : தோனி, கோலியை கலாய்த்த நெட்டிசன்ஸ்

இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது. இந்தியா, இங்கிலாந்து உடபட பல்வேறு நாடுகள் இதில் கலந்துகொண்டு விளையாடிவருகின்றனர். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி , அனைத்துப்போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி நாளை இங்கிலாந்து அணியுடம் மோதவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும், இந்திய அணியிருகும் புளூ வண்ணத்தில் ஒரே ஜெர்ஸியாக உள்ளதால் இந்திய அணியிக்கு சமீபத்தில் புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தப் புதிய ஜெர்ஸியுடன் தான் நாளை இந்திய அணி இங்கிலாந்துடன் மோதவுள்ளது.
 
இப்படியிருக்க, நம் இந்திய அணியினரின் புதிய ஜெர்ஸி நெட்டிசன்ஸ் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்த புதிய சீருடை இந்தியன் ஆயில் கார்பரேசன் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் சீருடை மாதிரி உள்ளது என்று, ஹார்லிக்ஸ் டப்பாவின் வண்ணத்தில் உள்ளது என்று கலாய்த்து தள்ளுகின்றனர்.