புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (12:20 IST)

“தோனி ஒரு லெஜண்ட்”- சச்சினுக்கு பதிலடி கொடுத்த விராட் கோஹ்லி

இந்திய வீரர்களுக்கு இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே போகிறது. சச்சின் டெண்டுல்கர் தோனியின் ஆட்டத்தை விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சச்சினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இந்த போட்டியில் தோனி மற்றும் விராட் கோலி தலா ஒரு அரை சதம் அடித்தனர். மொத்தமாக 76 ரன்கள் பெற்ற கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

பரிசளிப்பு விழாவில் பேசிய விராட் கோஹ்லி “நடு வரிசை பேட்ஸ்மேனாக டோனி என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஒரே ஒரு ஆட்டத்தில் மோசமாக விளையாடிவிட்டதால் உடனே எல்லாரும் இஷ்டத்துக்கு பேச துவங்கி விடுகிறார்கள். நாங்கள் எப்போதும் டோனிக்கு ஆதரவாக இருப்போம். டோனி பல போட்டிகளில் எங்களுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். அவருடைய கணிப்புகள் 10க்கு 8முறை சரியாக அமைந்திருக்கின்றன. எங்களுக்கு இப்போதும் ஆலோசனைகள் வழங்கி கொண்டிருப்பவர் தோனி. அவர் எப்போதுமே ஒரு லெஜண்ட். அதை நாங்கள் உணர்கிறோம்” என பேசியுள்ளார்.

விராட் கோஹ்லியின் இந்த கருத்து நேரடியாக சச்சின் பேசிய கருத்தையும், சச்சினையும் குறிப்பிட்டு பேசுவதாகவே உள்ளது. ஏற்கனவே தோனி ரசிகர்கள் பலர் சச்சினை வறுத்தெடுத்து கொண்டிருக்கும் நிலையில் கோஹ்லி இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.