ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 20 மார்ச் 2021 (21:30 IST)

இந்திய அணி அசத்தல் பேட்டிங்… வெற்றி இலக்கு 225 ரன்கள்…

ஐந்தாவது  டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடிய நிலையில் இந்திய அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றுபெற்றுள்ளன.

எனவே இன்று குர்ஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறும் 5 வது மற்றும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று யார் தொடரைக் கைப்பற்றப்போகிறார்கள் என ஆர்வம் எழுந்துள்ளது.
 
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தப் போட்டிகளைக் கண்டுவருகின்றனர். இதில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. இந்தியா பேட்டிங்கில் பட்டாசு கிளப்பியது. ரோஹித் சர்மா 64 ரன்களும், விராட் கோலி 80 ரன்களும், ஹர்திக் பாண்டியா 39 ரன்களும் அடித்தனர். சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் இந்திய அணியில் ஸ்கோர் 20 ஓவர்கள் முடியில்  224 அடித்து, இங்கிலாந்துக்கு 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது