செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (11:05 IST)

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி 20 – நடராஜன் சந்தேகம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடரின் முதல் ஆட்டத்தில் நடராஜன் இருப்பது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக மார்ச் 12 ஆம் தேதி டி 20 போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.இதற்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் நடராஜனும் ஒருவர்.

ஆனால் அவர் முதல் டி 20 போட்டியில் விளையாடுவது சந்தேகம் என சொல்லப்படுகிறது. அவர் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் காயத்துக்கான சிகிச்சையில் உள்ளார். காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அவர் முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே.