1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Two controversial wicket in yesterday match

நேற்றைய போட்டியில் சர்ச்சைக்குரிய இரண்டு விக்கெட்கள்!

Indian team victory
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட் கொடுக்கப்பட்டனர்.

சூர்யகுமார் யாதவ்வின் கேட்ச்சை மலான் பந்தை கீழே வைத்தது போல இருந்தது. ஆனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு அளிக்காமல் நடுவர்கள் அதை விக்கெட் என்று அறிவித்தனர். அதையடுத்து கடைசி ஓவரின் வாஷிங்டன் சுந்தர் அடித்த பந்தை அதில் ரஷீத் எல்லைக்கோடு அருகே நின்று கேட்ச் பிடித்தார். ஆனால் அவர் பவுண்டரி லைனை தொட்டது போல இருக்க, அதையும் விக்கெட் என நடுவர்கள் அறிவித்தனர்.
 
அடுத்த கட்டுரையில்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்! – குவியும் வாழ்த்துக்கள்!