1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:07 IST)

பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்!

subhman gill
இந்திய கிரிக்கெட் அணியின்  பேட்ஸ்மேன் கில், பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்துள்ளார்
 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியிலும் அதிரடி வெற்றி பெற்றுத் தொடரையும் வென்றுள்ளது.

இத்தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷூப்மன் திறமையயாக விளையாடியுள்ளார்.

முதல் போட்டியில்,208 ரன்களும், இரண்டாவது போட்டியில் 40 ரன்களும்,  இன்றைய போட்டியில் 112 ரன் களும் அடித்தார்.

எனவே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் ஆசம்(360) ரன்களுடன், முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த சாதனையை ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.