செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (08:49 IST)

இதுபோன்ற போட்டிகள் ஆபத்தானவை – அதிருப்தியை வெளிப்படுத்திய கோஹ்லி !

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் தனது அதிருப்தியை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளையும் விளையாடி வருகின்றன. நடந்து முடிந்த டி 20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதையடுத்து முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடக்க இருந்த நிலையில் போட்டி மழைக் காரணமாக 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. பின்னர் மழை விட்ட பிறகு வீரர்கள் இறங்குவதும் மழை வருவதுமாக தொடர 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

இதையடுத்து ஊடகங்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி , ‘கிரிக்கெட்டில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் மழையினால் இறங்குவதும் பிறகு போவதுமாக இருக்கும் ஆட்டங்களே. இதுபோன்ற போட்டிகளால் வீரர்கள் களம் வழுக்கும் தன்மையுடையதாக மாறும். எனவே வீரர்கள் காயம்படவே வாய்ப்புகள் அதிகம்.  மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களில் களமிறங்குவதும் பிறகு திரும்பிப் போவதுமான நிலை இருப்பது மிகவும் ஆபத்தானது.’ எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.