வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (22:37 IST)

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது ஒருநாள் போட்டி: மழையால் பாதிப்பு

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 
 
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மேற்கிந்திய தீவுகள் நேரப்படி மதியம் 12.45 மணிக்கு தொடங்கிய மழை தற்போது அரை மணி நேரம் ஆகியும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் சில நிமிடங்களில் மழையும் நின்று விடும் என்றும் அதன்பிறகு போட்டி தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
மீண்டும் போட்டி தொடங்கும் போது அவர்கள் குறைக்கப்படுமா என்பதை நடுவர் முடிவு செய்வார்கள். முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுக்களை பறி கொடுத்தாலும் கேப்டன் விராத் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 125 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 120 ரன்கள் எடுத்தார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்