தில்லி - லாகூர் பேருந்து சேவையை நிறுத்திய பாகிஸ்தான் !

pakistan
Last Updated: சனி, 10 ஆகஸ்ட் 2019 (16:07 IST)
சம்ஜௌதா விரைவு ரயில் சேவையை ஏற்கனவே பாகிஸ்தான் அரசு நிறுத்தியது. இந்நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் தில்லி - லாகூர் பேருந்து சேவையை ரத்து சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சிறப்புப் பிரிவை  ரத்து செய்யும் இந்திய அரசின் முடிவுக்கு, அண்டை நாடான பாகிஸ்தான்  அரசு கடும் எதிர்த்து  தெரிவித்து வருகிறது.
 
கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இதனையடுத்து 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
 
இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு ஜூலை முதல் மீண்டும் போக்குவரத்து சேவையை அறிவித்தது பாகிஸ்தான். இந்நிலையில் இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கியதால், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு, தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப பெறுவதாக கூறியது. நம் நாட்டு தூதரையும் இந்தியாவுக்கு அனுப்பியது. இதனைத்தொடர்ந்து பாக்..பிரதமர் இம்ரான் தலைமையிலான அரசு,  அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கமிட்டிக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து, சம்ஜௌதா ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
 
இதனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனவே இந்தியாவின் தில்லியிலிருந்து, பாகிஸ்தானின் லாகூர் வரியிலும், லாகூரில் இருந்து, அட்டாரி வரையிலும் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்பொழுது அந்த சேவையையும் பாகிஸ்தான் அரசு நிறுத்துவதாகக்  கூறியுள்ளதால், இரு நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :