திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:59 IST)

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா எடுத்த அதிரடி முடிவு

ind vs sa 3rd
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 
 
இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெல்லும் அணி ஒருநாள் தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் தொடரை வெல்ல தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran