திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:21 IST)

இந்தியாவில் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி: இன்று தொடக்கம்

football
16 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று இந்தியாவில் தொடங்க உள்ளது
 
7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான புவனேஸ்வர், நவிமும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் இன்று தொடங்குகிறது 
 
இந்த போட்டி வரும் 30ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியில் இந்தியா உள்பட 16 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடக்க நாளான இன்று பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன என்பதும் அதேபோல் இந்திய  - அமெரிக்க அணிகள் மோதும் போட்டியும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சில நியூசிலாந்து - சிலி அணிகள் மோதும் போட்டி மற்றும் ஜெர்மனி - நைஜீரியா ஆகிய அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெற உள்ளது
 

Edited by Siva