1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (21:08 IST)

செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன் - ஐசிசி அறிவிப்பு

Harmanpreet Kaur
ஐசிசி கிரிக்கெட் அமைப்பு செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன் பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி, ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளை   கவுரவித்து வருகிறது. எனவே  செப்டம்பர் மாதத்திற்கான வீரர், வீரங்கனைகள் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிரந்த வீரராக இடம்பிடித்துள்ளார். டி-20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ரிஸ்வான் இடம்பிடித்துள்ளார்.

அதேபோல், சிறந்த வீராங்கனைகள் பட்டியலில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இடம்பிடித்துள்ளார்.

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு  ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Sinoj