1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona in India today updates

2,000-த்திற்கு கீழ் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

India
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,957 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,16,394 ஆக குறைந்தது. புதிதாக 08 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,822 ஆக உயர்ந்தது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,60,198 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27,374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 2,19,04,76,220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,03,576 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 
Edited By: Sugapriya Prakash
About Writer
Sugapriya Prakash