வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (18:47 IST)

7டி20 தொடர்களை தொடர்ச்சியாக வென்று உள்ள இந்திய அணி!

இந்திய கிரிக்கெட் அணி இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த தொடருடன் தொடர்ச்சியாக 7 தொடரை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 1-1 என்ற கணக்கிலும், வங்கதேச அணிக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும் இலங்கைக்கு எதிராக 2-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்துக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் வென்று உள்ள இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வென்று உள்ளது 
 
எனவே இந்திய அணி தொடர்ச்சியாக ஏழு டி20 தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்து 2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவிற்கு வெளியே நடைபெற்ற டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது