1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (13:36 IST)

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த விராத்: தொடரை வெல்லுமா இந்தியா?

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த விராத்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார்
 
இதனையடுத்து அவர் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். எனவே இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்த விபரம் பின்வருமாறு:
 
இந்தியா: தவான், கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், நடராஜன், ஷர்துல் தாக்கூர், சாஹல்
 
ஆஸ்திரேலியா: ஷார்ட், வேட், ஸ்மித், மாக்ஸ்வெல், ஹெண்ட்ரிக்ஸ், ஸ்டோனிஸ், அபாட், சாம்ஸ், ஸ்வெப்சன், ஜாம்பா, அண்ட்ரூ டை
 
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வெல்லும் என்பதால் இந்திய அணி இன்று வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது