வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டி: இந்தியா வெற்றி

Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (05:21 IST)
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இன்று இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. எனவே முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது தவான் 55 ரன்கள் எடுத்தார். 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய விஜய்சங்கர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த
வெற்றி மூலம் இந்திய அணி 2 புள்ளிகள் எடுத்துள்ளது.

இந்த தொடரின் அடுத்த ஆட்டம் நாளை வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும்.


இதில் மேலும் படிக்கவும் :