ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (07:50 IST)

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி.. இந்தியா அபார வெற்றி..

இந்தியா, இலங்கை இடையே நேற்று முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 49 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 40 ரன்களும், எடுத்தனர்.
 
இதனை அடுத்து 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை விளையாடிய நிலையில் அந்த அணி 170 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியின் கடைசி ஏழு பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் டக் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்கார நிசாங்கா அபாரமாக விளையாடி 79 ரன்கள் எடுத்தார். நேற்றைய போட்டியில் இந்தியாவின் ரியான் பராக் 3 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப்சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
 
Edited by Siva