புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (17:12 IST)

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னி பாதை திட்டம் ரத்து.! அகிலேஷ் யாதவ்..!!

Akilash Yadav
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
 
இந்திய ராணுவத்தில் குறுகியகால, ஒப்பந்த முறை பணி நியமன திட்டமாக அறிவிக்கப்பட்ட அக்னி பாதை திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் மறுபுறம்  இந்த திட்டம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஒரு நல்ல திட்டம் என மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

 
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அவர், நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து அக்னி வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் குறுகிற கால அக்னி வீரர் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று பழைய ஆள்சேர்ப்பு முறை திரும்பக்கொண்டு வரப்படும்  என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.