திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (15:41 IST)

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பிரிவு.! இந்தியா வெளியேற்றம்.! தங்கம் வென்ற சீனா..!!

Olympics Shooting
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
 
33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்றிரவு கோலாகலமாக தொடங்கியது. வரும்ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.  
 
இந்நிலையில்  10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி களம் இறங்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமிதா - பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினர்.
 
ரமிதா - பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தைப் பிடித்தனர். இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்தனர்.  இதன் மூலம் இரு அணிகளும் பதக்கச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

 
தகுதிச் சுற்றில் சீனா (632.2), தென் கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8), ஜெர்மனி (629.7) ஆகிய 4 நாடுகள் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேறின. இதில் ஜெர்மனியை தோற்கடித்து கஜகஸ்தான் வெண்கலத்தை வென்றது. அதே போல், சீனா தங்கத்தையும் தென் கொரியா வெள்ளியையும் வென்றது.