1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (10:20 IST)

ஒருநாள் கண்டிப்பாக பயிற்சியாளர் ஆவேன் – சவுரவ் கங்குலி உறுதி !

இந்திய அணிக்கு என்றைக்காவது என்றைக்காவது ஒருநாள் நான் பயிற்சியாளாராவேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உறுதியளித்துள்ளார்.

இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணிகளைக் கபில்தேவ் தலைமையிலானக் குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. மீண்டும் ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய ரசிகர்கள் சிலர், முன்னாள் வீரர்களான டிராவிட் அல்லது கங்குலி போன்றோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் எனக் கருத்துகளைக் கூறி வருகின்றனர். ஆனால் பிசிசிஐ அறிவித்துள்ள தகுதிகள் பல அவர்களுக்குப் பொருந்தாது.

இது குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பியபோது ’எனக்குப் பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வம் உள்ளது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்கு ஒருநாள் நான் பயிற்சியாளராக ஆவேன் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆனால் அது இப்போது இல்லை. இன்னும் கொஞ்ச காலம் செல்ல வேண்டும். இப்போதைக்கு நான் பல விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன். ஐபிஎல், சிஏபி, டிவி வர்ணனை, இவற்றை முதலில் நிறைவு செய்கிறேன். ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு இப்போது நான் பதிலளிக்க விரும்பவில்லை’ எனக் கூறியுள்ளார்.