செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (16:12 IST)

ஓவர் பில்டப் கொடுத்து ஒன்னுமில்லாமல் போன ரெட்மி K20!!

கடந்த மாதம் வெளியான ரெட்மி K20 ஸ்மார்ட்போன் டச் குறைபாடுகளுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ரெட்மி K20 ஸ்மார்ட்போன் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.27,999, 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,999.
 
இந்த ஸ்மார்ட்போனில் டச் குறைபாடு உள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த குறைபாடு குறித்த விவரங்கள் இதோ... 
 
ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் டச் சென்சாரில் மிகப்பெரிய குறைபாடு உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு விரல்களை வைத்து டச் செய்ய வேண்டும். இப்போது ஒரு விரல் மட்டும் நகற்ற வேண்டும். மறு விரலை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். 
 
இந்நிலையில், எந்த விரலை மட்டும் அசைக்கிறோமோ, அந்த டச் சென்சார் மட்டும் நகல வேண்டும். மறுவிரல் டச் சென்சார் அசையாமல் இருக்க வேண்டும். ஆனால், ரெட்மி K20-ல், அசைக்காத விரலின் டச் சென்சார் கூட அசைகிறது. இதற்கு ஜிட்டர் (Jitter Issue) என்று பெயர். 
 
மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டும் போது தற்சமயம் அறிமுகம் ஆன ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு குறைபாடு இருப்பது பெரிய தவறாகவே பார்க்கப்படுகிறது.