சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி !

Last Modified வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (22:44 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கும் காஞ்சி வீரன்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது
இதனையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய காஞ்சி வீரன்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி: 191/3 20 ஓவர்கள்

காந்தி: 50
ஹரிஷ்குமார்: 53
சசிதேவ்: 41

காஞ்சி வீரன்ஸ் அணி: 130/10
19.2 ஓவர்கள்

சதீஷ்: 44
லோகேஷ்வர்: 20
சஞ்சய் யாதவ்: 12
இன்றைய போட்டிக்கு பின் திண்டுக்கல் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், காஞ்சி, சேப்பாக், மதுரை ஆகிய மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :