1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India vs australia third day score

இந்திய அணியின் நிதானமான ஆட்டத்தால் டிராவை நோக்கி செல்லும் அகமதாபாத் டெஸ்ட்..!

test
இந்திய அணியின் நிதானமான ஆட்டத்தால் டிராவை நோக்கி செல்லும் அகமதாபாத் டெஸ்ட்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நிதானமான ஆட்டம் காரணமாக டிராவை நோக்கி டெஸ்ட் போட்டி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியை 480 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிசை தொடங்கிய நிலையில் இன்றைய ஆட்டநேரம் முடிவில் 99 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்துள்ளது. 
 
சுப்மன் கில் அபார சதம் அடித்து உள்ளார் என்பதும், அவர் 128 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி 59 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். இந்த டெஸ்ட் போட்டி தொடங்கி மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை என்பதால் இந்த போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 வது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா வெற்றி