வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (16:12 IST)

480 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா.. பதிலடி கொடுக்குமா இந்தியா?

aus vs india
480 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா.. பதிலடி கொடுக்குமா இந்தியா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 480 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் காவாஜா மிக அபாரமாக விளையாடி 184 ரன்கள் எடுத்தார் என்பதும் அதேபோல் கேமரா கிரீன் 114 ரன்கள் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய பந்துவீச்சாளர்களை பொருத்தவரை அஸ்வின் 6 விக்கெட்டுக்களையும் ஷமி 2 விக்கெட்டுக்களையும் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva