நெட்பிளிக்ஸ் கட்டணம் இந்தியாவிலும் குறைகிறதா?
கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு ஓடிடிகள் உலகளவில் மிகப்பெரிய அளவில் சந்தையை பிடித்துள்ளன. கிட்டத்தட்ட திரையரங்குக்கு இணையான வருவாயை தயாரிப்பு நிறுவனங்கள் ஓடிடியில் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஓடிடிகளிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனமாக நெட்பிளிக்ஸ்தான் உள்ளது. அதற்குக் காரணம் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய லைப்ரரிதான் காரணம் என சொல்லப்படுகிறது.
ஓடிடி நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டதை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் கட்டணத்தை12 நாடுகளில் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஓடிடி நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவில் உள்ளதை அடுத்து நிறுவனங்கள் கட்டணங்களையும் குறைத்து வருகின்றன என்பதும் சில சலுகைகளையும் அறிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸின் கட்டணக் குறைப்பு இந்தியாவுக்கும் விரைவில் வர உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.