சுப்மன் கில் அபார சதம்… வலுவான ஸ்கோரை நோக்கி இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது அகமதாபாத் மைதானத்தில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 480 ரன்கள் எடுத்தன என்பதும் அந்த அணியின் உஸ்மான் காவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகிய இருவரும் அதிரடியாக சதம் அடித்து அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து நேற்று இரண்டாம் நாளில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சிறப்பாக விளையாடி, டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை அடித்துள்ளார். தற்போது வரை இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் சேர்த்துள்ளது. கில் 103 ரன்களோடும் கோலி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.