1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. india vs australia test score

2வது இன்னிங்ஸில் சரிய தொடங்கும் ஆஸ்திரேலிய விக்கெட்.. வெற்றி யாருக்கு?

India -australia test
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களும் எடுத்துள்ள நிலையில்ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்திருந்தது
 
இதனை அடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முதல் விக்கெட் இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விழுந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் காவஜா ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது பந்திலையே அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆஸ்திரேலிய தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் 66 ரன்கள் எடுக்க வேண்டும் 
 
இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் இன்னும் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறுவார்களா அல்லது ஆஸ்திரேலியா தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!