வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (18:19 IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்: திருமாவளவன்

Thirumavalavan
முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை திரட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். 
 
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக ஒரு பெரிய அணியை திரட்ட வேண்டும் என பல தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பல தேசிய தலைவரை சந்தித்து வருகிறார் என்பதும் அதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தேசிய அளவில் ஒரு அணியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் ஒரு சில தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக எதிர்ப்பு சக்திகளை ஓரணியில் திரட்ட தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாள் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அகில இந்திய பார்வையுடன் அரசியல் காய்களை அவர் நகர்த்தி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran