வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:24 IST)

மைதானத்தில்....புட்ட பொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீரர்...

இன்று மைதானத்தில் டேவிட் வார்னர்,நடிகர் அல்லு அர்ஜூனில் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடினார். அவர் செய்த நடன அசைவு வீடியோ வைரலாகி வருகிறது.

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டில் ஆஸ்திரேலியா நல்ல பார்மில் இருந்தால் 374 ரன்கள் அடித்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஒவர்களில் 308 ரன்கள் எடுத்துப் போராடித் தோற்றது. இதனால் ஆஸ்திரேலியா அணி அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணி பேட்டிங் செய்யும்போது, பவுண்டரி லைன் அருகில் ஃபீல்டிங் செய்த டேவிட் வார்னர்,நடிகர் அல்லு அர்ஜூனில் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடினார். அவர் செய்த நடன அசைவு வீடியோ வைரலாகி வருகிறது.