1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2020 (20:23 IST)

108 நாட்கள் வனவாசம்; வீடு திரும்பிய டேவிட் வார்னர்! – வைரலான வீடியோ!

108 நாட்கள் வனவாசம்; வீடு திரும்பிய டேவிட் வார்னர்! – வைரலான வீடியோ!
இங்கிலாந்து தொடருக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட டேவிட் வார்னட் 108 நாட்கள் கழித்து தற்போது வீடு திரும்பியுள்ள நிலையில் அவரது குழந்தைகள் அவரை வரவேற்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ரெஸ்ட் போட்டிகளுக்காக சென்ற ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் அங்கிருந்து ஐபிஎல் தொடருக்கான கொரோனா தனிமைப்படுத்தல் காரணமாக நேரடியாக அரபு அமீரகம் சென்றார். அங்கு கொரோனா தனிமைப்படுத்தல் முடிந்து சன் ரைஸர்ஸ் அணிக்காக ப்ளே ஆப் வரை ஆடிய அவர் ஐபிஎல் முடிந்த நிலையில் 108 நாட்கள் கழித்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்ற அவருக்கு அவரது குழந்தைகள் அளித்த பாசமான வரவேற்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாளை நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியிலும் வார்னர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.