1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India srilanka series schedule announced

இந்தியா இலங்கை தொடர் அட்டவணையை வெளியிட்ட சோனி லைவ்!

சோனி லைவ்
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளுக்காக செல்ல உள்ள நிலையில் அதே நேரத்தில் இலங்கைக்கு மற்றொரு அணி ஒருநாள் போட்டிகளில் விளையாட செல்கிறது. இதன் மூலம் இரண்டு சர்வதேச அணிகளை இந்தியா உருவாக்கியுள்ளது என பாராட்டுகள் கிடைக்கின்றன. இலங்கைக்கு செல்லும் அணிக்கு கேப்டனாக ஷிகார் தவான் நியமிக்கப்பட்டு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அனுப்பப்படுகிறார்.

இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை இப்போது வெளியாகியுள்ளது. ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 26 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25 தேதிகளில் நடைபெற இருப்பதாக சோனி லைவ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்தியா - இலங்கை: போட்டி அட்டவணை வெளியீடு!