எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் உடலில் 32 வகை கொரோனா: அதிர்ச்சி தகவல்!

Corona virus
எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் உடலில் 32 வகை கொரோனா: அதிர்ச்சி தகவல்!
siva| Last Updated: செவ்வாய், 8 ஜூன் 2021 (11:52 IST)
ஒரே பெண்ணின் உடலில் 32 வகையாக கொரோனா வைரஸ் உருமாறி இருந்த தகவல் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஏற்கனவே எய்ட்ஸ் தொற்று பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது அவரது உடலில் 32 வகையான கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து உள்ளது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவ உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு அந்த பெண்ணுக்கு ஏற்பட்டதாகவும் அந்த பெண்ணின் உடல் பலவீனம் காரணமாக கொரோனா வைரஸ் 32 முறை உருமாறி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 36 வயது பெண்ணின் உடலில் கொரோனா வைரஸ் 32
வகையாக உருமாறி இருப்பது மருத்துவ உலகிற்கே பேரதிர்ச்சியாக உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :