திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (18:36 IST)

16 வது சீசன் ஐபிஎல் மினி ஏலம் பற்றிய முக்கிய தகவல்

ஐபிஎல் 16 வது சீசன்  ஏலம் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் கோடைக் காலத்தில் நடக்கும்  ஐபிஎல் போட்டிக்கு என உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், வரும் 16 வது ஐபில் சீசன் அடுத்த ஆண்டு நடக்கும்  நிலையில், இதற்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  நடக்கவுள்ளது..

இந்த ஏலம் அன்று 2:30 மணி முதல் இரவு 8  மணி வரையில்    நடக்கும் என்றும், இந்த ஏலத்தில் பங்கேற்க 991 வீரர்கள் தம் பெயரை முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், இதில், சுமார் 405 வீரர்கள் மட்டுமே ஏலத்தில்   பங்கேற்பர் எனவும், இதில், 273 இந்திய வீரர்களும், 132 வெளி நாடு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏலத்தில் அடிப்படை விலை ரூ. 50 லட்சத்தில் இருந்து தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

Edited By Sinoj