வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (14:08 IST)

இந்தியா தான் என் நிரந்தர இடம், சீனாவுக்கு திரும்ப மாட்டேன்: தலாய்லாமா

talai lama
இந்தியா தான் என்னுடைய நிரந்தர இடம் நான் சீனாவுக்கு திரும்பப் போக மாட்டேன் என புத்த மத தலைவர் தலாய் லாமா அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய சீன படைகள் அவ்வப்போது மோதி வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தலாய்லாமா இந்த பிரச்சனை குறித்து இருநாட்டு அதிகாரிகளும் பேசி தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்
 
 மேலும் அருணாச்சல பிரதேசம் விவகாரம் தற்போது மேம்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் சீனாவுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை உண்டு என்றும் ஆனாலும் ஆனாலும் நான் சீனாவுக்குத் திரும்புவதில் அர்த்தமில்லை என்றும் தெரிவித்தார். 
 
நான் இந்தியாவை விரும்புகிறேன் என்றும் இதுதான் என் நிரந்தர இடம் என்றும் நான் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பது நேருவின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran