வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (16:15 IST)

2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா?

rohit
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்த ரோகித் சர்மா 2-வது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தற்போது அவருடைய காயம் முழுமையாக குணமடையவில்லை என்றும் எனவே அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கேஎல் ராகுல் வழிநடத்திய நிலையில் அவரே 2வது டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran