சச்சினைக் கலாய்த்த ஐசிசி – பதிலுக்கு சச்சினும் செம் கலாய் !

sachin
Last Updated: வெள்ளி, 17 மே 2019 (16:54 IST)
சச்சின் சமீபத்தில் தனது பள்ளித் தோழர் வினோத் காம்ப்ளியுடன் வலைப்பயிற்சி ஒன்றில் ஈடுபடுவது போல வீடியோ  ஒன்றை வெளியிட்டார்.

சச்சின் தனதுப் பள்ளிக்கால நண்பர் வினோத் காம்ப்ளி மிடில் செக்ஸ் குளோபல்  அகாடெமியில் வலைக்குள் விளையாடினார். அப்போது அவர் வினோத் காம்ப்ளிக்கு சில பந்துகளை வீசினார். அப்போது அவர் தனது காலை கிரிஸுக்கு வெளியே வைத்து சில பந்துகளை வீசினார்.

இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆக ஐசிசி சச்சின் பந்து வீசுவதையும் மேற்கிந்திய தீவுகள் நடுவர் ஸ்டீவ் பக்னரின் புகைப்படத்தையும் இணைத்து நோபால் என சச்சினைக் கலாய்த்தது. ஸ்டீவ் பக்னர் சச்சினுக்கு பல முறை சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த டிவிட்டுக்கு பதில் அளித்துள்ள சச்சின் ‘நல்லவேளை நான் பந்துவீசுகிறேன். பேட் செய்யவில்லை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :