செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (09:24 IST)

பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் ஆல்டைம் உலகக்கோப்பை அணி – கிரிக் இன்போ இணையதளம் அறிவிப்பு !

கிரிக் இன்போ இணையதளம் தங்கள் உறுப்பினர்கள் மூலம் உலகின் சிறந்த உலகக்கோப்பை அணியை வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கும் வேளையில் பல்வேறு கருத்துக்கணிப்புகள், கற்பனை அணிகள் ஆகியவை வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் இணையதளமான கிரிக் இன்போ நிறுவனம் தங்களுடைய கனவு உலகக்கோப்பை அணியை வெளியிட்டுள்ளது.

அதில் இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களின் செய்ல்பாடுகளில் இருந்து சிறந்த 11 பேரைத் தேர்வு செய்துள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவீரர்கள் விவரம்.

ஆடம் கில்கிறிஸ்ட், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், விவ் ரிச்சர்ட்ஸ், குமார் சங்ககரா, இம்ரான் கான் (கேப்டன்), லான்ஸ் குளூஸ்னர், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், க்ளென் மெக்ரா.

இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்தா 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 2 வீரர்களும் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தலா 1 வீரரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சனத் ஜெயசூர்யா, இன்சமாம் உல் ஹக், சவ்ரவ் கங்குலி, பிரையன் லாரா, ஜாக்ஸ் காலீஸ் மற்றும் ஸ்டீவ் வாஹ் போன்ற உலகக்கோப்பை நாயகர்களுக்கு அதில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.