திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (16:03 IST)

ஓட்டு போட்ட சச்சினுக்கு கிடைத்த புது அனுபவம்!

இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இன்றுதான் வாக்குப்பதிவு என்பதால் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்
 
இந்த நிலையில் கிரிக்கெட் கடவுள் சச்சின் தெண்டுல்கரும் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். மற்ற தேர்தலை விட இந்த தேர்தல் தனக்கு ஸ்பெஷல் என்றும், இந்த தேர்தலில் தனது மகன் அர்ஜூன் மற்றும் மகள் சாரா ஆகியோர் முதல் முறையாக தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளார்கள் என்றும் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சச்சின், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜூன் ஆகிய நால்வரும் ஓட்டு போட்ட விரல்களை காட்டியவண்ணம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது