செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (20:17 IST)

டிக்டாக் நடிகைக்கு அடித்த’ லக்’ ...தேர்தலில் சீட் கொடுத்த பாஜக.... பரவலாகும் வீடியோ

ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.  இந்த தேர்தலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நடிகைக்கு பாஜக சீட் வழங்கி உள்ளது. 
ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 90 உறுப்பினர்களைக் கொண்ட  சட்டப்பேரவைத் தேர்தலில் இப்போதுள்ள எம்.எல்.ஏக்களில் 38 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் அதம்பூர் தொகுதியில் பிரபல டிக் டாக் நடிகை சோனாலி பாஜக  சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
மக்களுக்கு வெகுவாகப் பரீட்சையமாகி உள்ள சோனாலியினால் கட்சிக்கு வெகுவான ஓட்டுக்களை பெற முடியும் என கட்சி கருதுவதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 96 தொகுதியில் பலமுள்ள போட்டியாளர்களை நிறுத்தும் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.