செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2019 (22:03 IST)

புரோ கபடி போட்டி: டெல்லியை பின்னுக்கு தள்ளியது பெங்கால்

புரோ கபடி போட்டியின் லீக் போட்டிகள் கடந்த பத்து வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்கால் மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றன
 
 
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பெங்கால் அணியும் மோதின. இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சமமான திறமையில் விளையாடிய நிலையில் இறுதியில் பெங்கால் அணி 40 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 39 புள்ளிகளும் எடுத்தனர். இதனையடுத்து பெங்கால் அணி ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 73 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்தது. இதுவரை முதலிடத்தில் இருந்த டெல்லி அணி 72 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது
 
 
இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஜெய்ப்பூர் அணியும் புனே அணியும் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணியின் ஆதிக்கம் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்த நிலையில் இறுதியில் ஜெய்ப்பூர் அணி 43 புள்ளிகளூம், புனே அணி 34 புள்ளிகளும் எடுத்த்தை அடுத்து ஜெய்ப்பூர் அணி 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
 
நாளை டெல்லி மற்றும் பாட்னா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் டெல்லி வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது