மகன் அருகே படுக்கையில் நெளிந்த 6 அடி பாம்பு : அலறியடித்து ஓடிய தாய்!

snake
sinoj kiyan| Last Modified செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (21:08 IST)
ஹரியானாவில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு வேளையில் படுக்கையில் பாம்பிருந்துள்ளது. அதைப் பார்த்த ஒரு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே பாம்புகள் கார், குளிர்சாதனப் பெட்டி, பட்ரூம் என பல்வேறு இடங்களில் வந்து குடிபுகுந்துள்ள செய்திகள் இணையதளதில் பரவலாகி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஹரியானா மாவட்டத்தில், ஒரு வீட்டில் கணவன் இரவுப் பணிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயம் படுக்கையில், தூங்கிக் கொண்டிருந்த தனது மகனுக்கு அருகில் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஊர்வதைப் பார்த்து பதறிப்போனார்.
 
தனது வீட்டருகில் இருந்தவர்களுக்கு குரல் எழுப்பி யாரும் வராததால், தனது கணவருக்கே போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர், எவ்வளவோ முயற்சி செய்தும் பாம்பை வெளியேற்ற முடியவில்லை. பின்னர் வந்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து அங்கு விரைந்து வந்த அவர்கள் பாம்பை அங்கிருந்து எடுத்து வெளியேற்றினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :